சர்வதேச ரீதியில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான எதிலி அந்தஸ்து மற்றும் உலகின் எந்தப் பிரதேசத்திலும் அவர்கள் வாழ்வதற்கான உரிமையும், புகலிடம் கோரிக்கைக்கான சர்வதேச சட்டங்களுக்கு அமைவான சட்ட ஆலோசனைகள், சட்டவாளர் உதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை ஏற்படுத்துவதற்கான ஒன்றிய இணையமாக செயல்படுத்தலும், அமுல்படுத்தலும் எமது நோக்கமாகும். நாம் புலம்பெயர்ந்தவர்களுக்கான தற்காலிக அகதி அந்தஸ்துகளோ அல்லது நிரந்தர அகதி அந்தஸ்துகளுக்கான கோரிக்கையாளர்களின் உண்மை நிலைப்பாட்டிற்கு அமைவாகவும், அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப குரல் கொடுத்துவருவதோடு, அவர்களின் வாழ்வுரிமைக்கான நீதியை பெற்றுக் கொடுக்கவும் கடினமாக உழைத்து வருகிறோம். இச்செயற்பாடானது கடந்த 11 வருடங்களுக்கு மேலாக எமது நிறுவனத்தினாலும், வலையமைப்பு பங்காளர்களினாலும் மற்றும் தன்னார்வ தொண்டர்களினாலும் செயல்படுத்தி வருகின்றோம். அத்துடன் இலங்கை நாட்டில் வாழும் மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான ஊக்குவிப்புகளையும், ஆலோசனைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது.
அகதிகளுக்காக இணைக்கப்படுகின்ற மக்களின் வாழ்விட மற்றும் வாழ்வாதார உரிமைகளுக்கான ஏற்புடைய காரணிகள் மற்றும் சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுத்தல்.
அகதிகளின் நலன் மற்றும் வாழ்வுத்திட்டங்களுக்காக பாடுபடுதல்.
1.புலம்பெயர் தமிழர்களுக்கான நியாயமான அகதி அந்தஸ்தை பெறுவதற்கான சட்ட ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்குதல்.
2.புகலிட கோரிக்கைக்கான சட்ட வல்லுநர்கள் மற்றும் இதற்காக செயல்படுகின்ற மனித உரிமை நிறுவனங்களுடன் இணைந்து ஒரு வலையமைப்பாக செயல்படுதல்.
3.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சாசனங்கள் மற்றும் அறிவித்தல்களுக்கு அமைவாக அவற்றை மக்களுக்கு வெளிப்படுத்தலும், அதனை பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளும்.
4.மனித உரிமை கல்விகளை அனைவருக்கும் கற்பித்தல் மற்றும் அவற்றை தெளிவுபடுத்துதல் மூலம் சமூக குற்றங்கள், பழுதுகள், பாகுபாடுகளை இல்லாதொழித்தல்.
5.மனிதன் மற்றும் இயற்கை போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கான கல்வி, வாழ்வாதாரம் மற்றும் சட்ட ஆலோசனைகளை வழங்குதல்.
6.கல்விக்கான ஊக்குவிப்புகள், உரிமைகள் சார்ந்த கற்கை நெறிகள், தொழில்நுட்ப அறிவுகளை மாணவர் சமூகத்திற்கு வழங்குதல்.
7.கணவனை இழந்த பெண்கள் மற்றும் பெண்தலைமையிலான குடும்பங்களுக்கான பொருளாதார மேம்பாடுகளை வழங்குதல்.
8.கிராம மட்டங்களில் மனித உரிமைகள் மற்றும் பெண்கள் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுகளை நடத்தியும், குழுக்களை அமைத்தும் அதன் மூலம் தொடர்ந்து வலுவூட்டுதலும்.
9.மனித ஆதிக்கம் மற்றும் மனித வியாபாரங்களுக்கு எதிரான சமூக வளமூட்டல் செயற்பாடுகளை முன்னெடுத்தல்.
10.சிறுவர்கள் மற்றும் பெண்களை வேலைக்கமர்த்தி வளச்சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் செய்வதற்கெதிராக செயற்படல்
மனித கௌரவம் – ஒவ்வொரு மனிதருக்கும் பிறப்பால் உரிய மதிப்பும் கௌரவமும் உள்ளதென நாங்கள் நம்புகிறோம். அவர்களின் பின்னணி அல்லது சமூக நிலையைப் பொருட்படுத்தாமல், மரியாதை, கருணை மற்றும் கௌரவத்துடன் அணுகப்பட வேண்டும்.
நீதி மற்றும் சமத்துவம் – அனைவருக்கும், குறிப்பாக ஒதுக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த சமூகங்களுக்கு சம உரிமைகள் மற்றும் சட்ட நீதியை உறுதி செய்வது முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட செயல் ஆகும்.
மனித உரிமை ஆதரவு – உலகளாவிய மனித உரிமை தரங்களை நாங்கள் கற்றுக்கொண்டு, மக்களுக்குத் தங்களுடைய உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவற்றைப் பெறுவதற்கான வலிமையை வழங்குகிறோம்.
உள்ளடக்கம் – நாங்கள் பன்முகத்தன்மையையும் பல்வகைப்பாட்டையும் அங்கீகரித்து, இன, பாலினம், மதம் அல்லது சமூக-பொருளாதார நிலை அடிப்படையில் ஏற்படும் பாகுபாடுகளை நீக்க உறுதியாக செயல்படுகிறோம்.
கல்வி மூலம் சக்தி வாய்ந்த ஆக்கம் – சமூக மாற்றத்திற்கும் நீடித்த முன்னேற்றத்திற்கும் கல்வி ஒரு முக்கிய கருவி என நாங்கள் நம்புகிறோம். அறிவும் திறனும் தேவையான மக்களுக்கு அதனை வழங்க முயலுகிறோம்.
கருணையுள்ள சேவை – போரில், இடம்பெயர்வில் அல்லது இயற்கை பேரழிவுகளில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அக்கறையுடன் நேர்த்தியாகவும் நேர்மையுடன் சேவை செய்கிறோம்.
பொறுப்பும் வெளிப்படை தன்மையும் – நாங்கள் எங்கள் செயல்களில் நேர்மையும் பொறுப்பையும் கடைப்பிடிக்கின்றோம். இதன் மூலம், நாங்கள் சேவை செய்யும் சமூகங்களில் நம்பிக்கையும் நம்பகத்தன்மையும் உருவாகின்றன.
ஒருமைப்பாடு – தனிநபர்கள், சமூகங்கள், அமைப்புகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் நிலையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நாங்கள் நம்புகிறோம்.
மீட்பு மனோபாவமும் நம்பிக்கையும் – மீளிழையும் மக்களுக்கு நாங்கள் நம்பிக்கையையும் நிலைத்த வாழ்வையும் மீட்டெடுக்க உதவுகிறோம். அவர்களின் வாழ்க்கையில் நிலைத்தன்மை மற்றும் கௌரவம் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும்.
பாலின சமத்துவம் மற்றும் பாதுகாப்பு-பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க நாங்கள் உறுதியாக செயல்படுகிறோம்.